கொல்கத்தா: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக பணப்பட்டுவாடா செய்து வருவதாக மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மமதா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தேர்தல் பிரச்சாரத்தின் போது வார்த்தை போர் தீவிரமடைந்து வருகிறது.
இந் நிலையில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக பணம் பட்டுவாடா செய்து வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு தனது அதிகாரத்தை மாநில தேர்தலில் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாங்கள் சாதாரண மக்கள் என்றாலும் போராடுவோம். தேர்தலில் பணத்தை முறைகேடாக பயன்படுத்துவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். தேர்தலையொட்டி பாஜக தங்களது நிறுவனங்கள் மூலம் பணம் பட்டுவாடா செய்கிறது என்று குற்றம்சாட்டினார்.