டெல்லி

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு வாக்களிக்க மறுக்கும் தேசியவாதிகளுக்குத் தமது ஆதரவு என பதிவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 19 ஆ தேதிஇந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே3 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. வரும் மே 13 ஆம் தேதி 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் 4 ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது.

பாஜகவை சேந்த பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சூராவளி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது X தள பக்கத்தில்,

” மோடிக்கு வாக்களிக்க மறுக்கும் தேசியவாதிகளை நான் ஆதரிக்கிறேன். ஆயினும்  பாஜக காரியகர்த்தா வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை நான் ஆதரிக்கிறேன். ஏனெனில் ஏப்ரல் 2020 முதல் லடாக்கின் 4,064 சதுர கிலோமீட்டர் பரப்பளவை  கைப்பற்ற சீனாவை அனுமதித்த மோடி,  ஒரு கைப்பிடி மண்ணை கூட யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்ற பொய்யைச் சொல்கிறார்.  லடாக்கியர்கள் செம்மறி ஆடுகள் மேய்க்கும் உரிமையை கூட இழந்துள்ளனர்”.

என்று பதிவிட்டுள்ளது பாஜகவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.