புவனேஸ்வர்
நடைபெற உள்ள மக்களவை மற்றும் ஒடிசா சட்டசபைத் தேர்தல்களில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.
இம்முறை ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் கட்சி மற்றும் பா.ஜ.க. இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இரு கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தனித்துப் போட்டியிட உள்ளதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.
மாநில பா.ஜ.க. தலைவர் மன்மோகன் சமால் ‘எக்ஸ்’ தளத்தில்,
“பிரதமர் மோடியின் தலைமையில் வளர்ச்சியடைந்த ஒடிசா மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கிட, ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவை தொகுதிகள் மற்றும் 147 சட்டமன்றத் தொகுதிகளிலும் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும்”
என்று பதிவிட்டுள்ளார்.