டில்லி
சென்ற வருடம் நடந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்துக்கு பாஜக ரூ.252 கோடி செலவு செய்துள்ளது

சென்ற வருடத் தொடக்கத்தில் இருந்து 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்துள்ளன. அவை தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் ஆகும். இந்த் தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியும் செலவு செய்த தொகை குறித்த விவரங்களைக் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.
அவ்வகையில் தேர்தல் பிரசாரத்துக்காக அதிக அளவில் பாஜக செலவு செய்துள்ளது. பாஜக ரூ.252,02,71,753 செலவு செய்துள்ளது. இதில் மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.151 கோடி செலவு செய்துள்ளது. இது மொத்தத் தொகையில் 60% ஆகும். பாஜக அடுத்ததாக அசாம் மாநிலத்தில் ரூ.43.81 கோடி செலவு செய்துள்ளது.
மூன்றாவதாகக் கேரளத்தில் ரூ.29.24 கோடி, தமிழகத்தில் ரூ.22.97 கோடி புதுச்சேரியில் ரூ.4.79 லட்சமும் செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்துக்காக மேற்கு வங்கத்தில் திருணாமுல் காங்கிரஸ் ரூ.154.28 கோடி தேர்தல் பிரசாரத்துக்குச் செலவு செய்துள்ளது. இது பாஜக செலவு செய்ததை விடவே அதிகம் ஆகும்.
[youtube-feed feed=1]