ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி என மூன்று கட்டமாக காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. வாக்குகள் அக்டோபர் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலை முன்னிட்டு  அங்குள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.  இந்த தேர்தலில் காங்கிரசும் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. கூட்டணியில் சி.பி.எம். கட்சியும் இடம் பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், சில தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சியினர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கையோடு, எங்கள் செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டால் காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியை ஆதரிக்க தயார் என தெரிவித்துள்ளது.

இன்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 44 வேட்பாளர்களை பாஜக மேலிடம் இன்று அறிவித்துள்ளது. நாளை ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் முடிவடையும் நிலையில் இன்று வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.