போபால்

த்தியப்பிரதேசத்தில் ஒரு சிறுவன் மீது சிறுநீர் கழித்த பாஜக நபரின் வீடு புல்டோசரைக் கொண்டு இடிக்கப்பட்டுள்ளது.

தேஷ்முக் ரவுத் என்னும் சிறுவன் மத்தியப்பிரதேச மாநிலம் சித்ஹி மாவட்டத்தைச் சேர்ந்தவன்  ஆவான்.  பழங்குடி தொழிலாளியான தேஷ்பத் சாலையோரம் அமர்ந்திருந்த போது ஒரு நபர் அவன்மீது சிறுநீர் கழித்தார்.  அந்த நபர் புகைபிடித்தவாறு அந்த தொழிலாளி மீது சிறுநீர் கழிக்கும் கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதேபகுதியைச் சேர்ந்த பர்வேஷ் சுக்லா என்பதைக் கண்டுபிடித்தனர்., அவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் கேதார்நாத் சுக்லா மற்றும் பிற பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பர்வேஷ் சுக்லா தலைமறைவான நிலையில் அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்தனர்., இந்த விவகாரத்தில் குற்றவாளி மீது தேசியபாதுகாப்பு சட்டம் பாயும் என மத்தியப்பிரதேச முதல்வர் தெரிவித்திருந்தார்.

நேற்று தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லாவை காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று பர்வேஷ் சுக்லா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரின் வீட்டின் ஒரு பகுதியை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்தனர்.  பர்வேஷ் சுக்லவின் வீடு ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதால் வீட்டின் ஒரு பகுதியை அதிகாரிகள் நேற்று இடித்தனர்.

தன் மீது சிறுநீர் கழித்த வீடியோ போலியானது எனக் கூறக்கோரியும், எழுத்துப்பூர்வமாகத் தன்னை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றதாகப் பாதிக்கப்பட்ட தொழிலாளி தேஷ்பத் ரவத் காவல்துறை மீது குற்றஞ்சாட்டியுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.