சண்டிகர்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு மத்திய பாஜக அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரியில்,பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. குர்பிரீத் சிங் கோகி தற்செயலாக துப்பாக்கியால் சுட்டதில் பலியானதால், காலியான அந்த தொகுதிக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. பாஜக ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசி இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டது என கூறப்படுகிறது.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சண்டிகாரில் செய்தியாளர்களிடம் சிந்தூர் பெயரை கொண்டு வாக்குகளை பெற பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது என குற்றச்சாட்டாக கூறினார். அப்போது அவரிடம் நிருபர்கள், பஞ்சாபின் லூதியானா நகரில் பா.ஜ.க.வினர், தேர்தல் பிரசாரத்தின்போது ஆபரேஷன் சிந்தூரை பயன்படுத்துவது பற்றி கேள்வி எழுப்பினர்.
பகவந்த் மான்.,
”:இந்த பிரசாரம் பற்றி ஒவ்வொருவரும் கிண்டல் செய்து வருகின்றனர். நீங்கள் இதனை (சிந்தூர்) எடுத்து கொண்டு சென்று உங்கள் மனைவியிடம் கொடுத்து, மோடியின் பெயரால் எடுத்து கொள் என கூறுவீர்களா? இது என்ன ஒரு நாடு-ஒரு கணவர் திட்டமா?, சிந்தூரின் பெயரால் வாக்குகளை கேட்பது. எல்லாவற்றிற்கும் எல்லை உள்ளது:
என பதிலளித்ததால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
பகவந்தின் சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அக்கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு, பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மனைவிகளை அவர் புண்படுத்தி உள்ளதால் இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.