பெங்களூரு தெற்கு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, சென்னையைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசை பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தை திருமணம் செய்ய உள்ளார்.
இவர்களது திருமணம் வரும் மார்ச் 4ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளதாகவும் இதுகுறித்து இருவரும் ஏற்கனவே சந்தித்து பேசிவிட்டதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மிருதங்க வித்வான் ஸ்கந்த பிரசாத் மகளான சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் பிரபல கர்நாடக இசை பாடகர் சீர்காழி ஜெயராமனின் பேத்தி ஆவார்.
கர்நாடக இசைப் பாடகியான சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத், முறைப்படி பரதநாட்டிய கலையையும் பயின்றவர். சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் (பயோ இன்ஜினியரிங்) பட்டம் பெற்றுள்ள சிவஸ்ரீ, சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்ஏ பட்டமும், சென்னை சமஸ்கிருத கல்லூரியில் சமஸ்கிருதத்தில் எம்ஏ பட்டமும் பெற்றுள்ளார்.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்தில் பாடலையும் பாடியுள்ள சிவஸ்ரீ கன்னட மொழியில் வெளியான அப்படத்தின் சில பாடல்களையும் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.