டெல்லி: பொதுமக்கள் தற்காப்புக்காக பாட்டில்கள், அம்புகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் என பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் ஜஹாங்கிர்புரியில் கடந்த 16ந்தேதி நடைபெற்ற வகுப்புவாத மோதல்களை அடுத்து சாக்ஷி மகராஜின் பதிவு வெளியாகி உள்ளது.
பாஜக சார்பில் 5முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் சர்ச்சைக்குரிய சாமியார் சாக்ஷி மகராஜ். உன்னாவ் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருப்பவர். சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பையும், வன்முறைகளையும் தூண்டி விடுபவர். இவர்மீது பல வழக்குகள் உள்ளன. இருந்தாலும், அவரது உன்னாவ் தொகுதியில் தொடர்ந்து இவர்தான் வெற்றி பெற்று வருகிறார். இவர் சமீபத்தில், 4 மனைவிகளை கட்டிக்கொண்டு 40 குழந்தைகளை பெறும் கலாச்சாரம் நாட்டில் அதிகரித்து வருகிறது. இதனால், இந்து பெண்களும் குறைந்தது 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், பெதுமக்கள் தங்கள் வீடுகளில் குளிர்பான பாட்டில்கள் மற்றும் அம்புகளை வைத்துக் கொண்டால், கும்பல்கள் உங்கள் வீடுகளை தாக்கல் வந்தால் தற்காத்து கொள்ளலாம், காவல்துறையினர் வந்து பாதுகாக்க மாட்டார்கள் என்று கூறி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், கும்பல் ஒன்று கையில் கம்புகளுடன் ஒடி வரும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, திடீர்னு இது போன்ற கூட்டம் உங்கள் தெருவுக்கோ, பக்கத்து வீட்டுக்கோ அல்லது உங்கள் வீட்டுக்கோ வந்தால், அதற்கு தீர்வு இருக்கு. இது போன்ற விருந்தாளிகளுக்கு, ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு பெட்டி குளிர்பானங்கள் (பாட்டில்கள்) மற்றும் சில அம்புகள் இருக்க வேண்டும். ஜெய் ஸ்ரீ ராம்.
போலீஸ் உங்களை காப்பாற்ற வராது, மாறாக தங்களை காப்பாற்ற ஒளிந்து கொள்வார்கள். இவர்கள் (கும்பல்) ஜிஹாத் செய்து விட்டு சென்ற பிறகு, போலீஸ் லத்தியுடன் வந்து விசாரணை குழுவை அமைப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார்.
சாக்ஷி மகராஜின் இந்த சர்ச்சை பதிவு பெரும் வைரலாகி வருகிறது.
பக்ரீத்துக்கு ஆடு வெட்டலைன்னா, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலை… கொளுத்திப்போட்ட சாக்சி மகராஜ்…