டில்லி:

டில்லி சட்டமன்றத்தில் மோடி வாழ்க, மோடி ஜிந்தாபாத்  என்று கோஷமிட்ட பாஜக எம்எல்ஏக்கள் சட்டமன்ற காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.

டில்லியில் தற்போது சட்டமன்ற பட்ஜெட் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கெஜ்ரிவால் அரசு இடைக்ககால பட்ஜெட் தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை யினர் நேற்று அதிகாலை பாகிஸ்தானுக்குள் புகுந்து  பயங்கரவாத முகாம்களை கூண்டோடு அழித்தனர். இதற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக  டில்லி சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது,  பா.ஜ.க. எம்எல்ஏ  ராம் நிவாஸ் கோயல் இந்திய விமானப்படைக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு பதிலாக மோடி ஜிந்தாபாத் என்று முழக்க மிட்டார். அவருடன் சேர்ந்து மற்ற பாஜ எம்எல்ஏக்களும் மோடி ஜிந்தாபாத் என்று கோஷமிட்டனர்..

இதற்கு ஆம்ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அதையடுத்து, சபாநாயகர், பாஜக எம்எல்ஏக்கள் கண்டித்தார். ஆனால்,  அவர்கள் தொடர்ந்து,  “மோடி ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டனர்.

இதையடுத்து அவர்களை சட்டமன்ற காலர்கள் மூலம் வெளியேற்ற சட்டமன்ற சாபாநாயகர் உத்தரவிட்டார். காவலர்கள், பாஜக எம்எல்ஏக்களை சபையை விட்டு வெளியேற்றினர். அப்போது, பாரத் மாதா கிஜே, வந்தே மாதம் என்று குரல் எழுப்பியவாறு அவர்கள்  வெளியேறினர்.