பெங்களூரு

பாஜக எம் எல் ஏக்கள் கர்நடக சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

காங்கிரச் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவில் முதல்வராக சித்தராமையா உள்ள நிலையில். அங்கு பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. கடந்த 7 ஆம் தேதி   கர்நாடகாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது அவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. எனவே, அவையில் தினமும் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

, பட்ஜெட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள்,கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே அரசியல் தலைவர்களை ஹனி டிராப் மூலம் சிக்க வைக்க முயற்சி நடைபெறுவதாக ஆளும் கட்சி அமைசரே எழுப்பிய விவகாரம் அவையிலும் எதிரொலித்துள்ளது. இதுகுரித்துஉயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா கூறிய போதிலும் அவையில் அமளி நீடித்து வருகிறது.

, இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட  நிதி மசோதாவை, பொதுப்பணி ஒப்பந்தத்தில் சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா என தவறாக கருதிய பாஜக எம்.எல்.ஏக்கள், மசோதாவின் நகலை கிழித்து அமளியில் ஈடுபட்டனர். பாஜக எம் எல் ஏக்கள் அவவையின் மையப்பகுதிக்கு வந்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டதால்ல் அவையில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.