`லவ் ஜிகாத்தைத் தவிர்க்க, சிறுவயதிலேயே பெண்களுக்கு திருமணத்தை நிச்சயித்துவிட வேண்டும் என்று மத்தியப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ கோபால் பார்மர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
மத்தியப்பிரதேசத்தின் ஆக்ரா மால்வா தொகுதி எம்.எல்.ஏ கோபால் பார்மர். இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போது, , ‘முன்பெல்லாம், குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்துவைக்கப்பட்து. அந்தக் கணவன் மனைவி உறவு இறுதிவரை நீடித்தது. பெண்ணின் திருமண வயது 18 என்ற `நோய்’ வந்த பிறகுதான், நிறைய பெண்கள் காதலித்து, காதலனுடன் ஓடிப்போகிறார்கள். `லவ் ஜிகாத்’ அதிகரிக்கத் தொடங்கியது. .
குறிப்பாக பள்ளி, பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் பெண்களே `லவ் ஜிகாத்’தில் சிக்குகிறார்கள். அந்தக் குற்றவாளிகள் பெண்களை ஏமாற்றி தந்திரமாக தங்கள் வலையில் சிக்க வைப்பார்கள். பெண்கள் பருவமடைந்தவுடன் அவர்களுக்கு இதுபோன்ற சிந்தனைகள் ஏற்படத் தொடங்கும். அதனால், அவர்களின் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்
‘பெண்ணின் திருமண வயது 18 என்ற அரசு சட்டம் நோக்கம் வேறு. ஆனால், கிராமங்களில் சிறு வயதிலேயே திருமண நிச்சயம் செய்யும் நடைமுறை வேறு. தனக்கு திருமணம் நிச்சம் செய்யப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்து, பெண் தவறான வழியில் செல்லமாட்டார். `லவ் ஜிகாத்’ என்ற பெயரில், பெண்களை வலையில் சிக்கவைக்கின்றனர். சிறு வயதிலேயே திருமண நிச்சயம் செய்வதன் மூலம், பெண்கள் தவறான வழியில் செல்வதை தடுக்கலாம்’’ என்று கூறினார்.
இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.