செகோர்,  மத்தியப் பிரதேசம்

த்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் இதுவரை கொரோனாவால் 90 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுக் கூட்டத்தில் கூறியுள்ளார்.

 

நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.   சமூக இடைவெளியைப் பல மாநிலத்தில் ஆளும் கட்சியினரே பின்பற்றுவதில்லை.  குறிப்பாக பாஜக கட்சி சமூக இடைவெளி பற்றி பிரசாரம் செய்து வரும் வேளையில் அக்கட்சியினரே அதை பின்பற்றுவதில்லை எனக் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில்  பாஜக தலைவர்கள் கலந்துக் கொள்ளும்  நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் விதிகள் மீறல் நடப்பதாகக் காங்கிரஸ் கட்சியினர் ஆதாரத்துடன் குற்றம் சாட்டுகின்றனர்.  ஆனால் அதற்கு பாஜகவினர் கொரோனா பரவுதலைத் தடுப்பதில் பாஜக மும்முரம் காட்டவில்லை எனத் தவறாகக் குறிப்பிடக் காங்கிரஸ் கட்சி இவ்வாறு புகார் அளிப்பதாக பதில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் செகோர் மாவட்டத்தில் இச்சாவார் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் கரன்சிங் வர்மா கலந்துக் கொண்ட் பொதுக் கூட்டத்தில் சமூக இடைவெளியை யாரும் பின்பற்றவில்லை.  அங்கு ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு கிராம் மக்களும் பாஜக ஊழியர்களும் கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.  இதைவிட அதிர்ச்சி வ்ர்மாவின் பொதுக் கூட்ட உரையாகும்.

கரன்சிங் வர்மா தனது உரையில், “நாம் கொரோனாவுக்கு எதிராகப் போர் நடத்தி வருவதை அனைவரும் பாருத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.  எனவே குறைந்தது ஐந்து அடி தூரத்தை அனைவரும் பின்பற்றுங்கள்.  கொரோனா என்பது சீனாவில் இருந்து வந்த கொள்ளை நோய் ஆகும்.   இது நாடு முழுவதும் பரவி உள்ளது.

கொரோனாவால் சுமார் 85 முதல் 90 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்  நாட்டில் உள்ள  அனைத்து பணமும் அதற்கே செலவாகிறது.   பல மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன.  தொழிற்சாலைகள் மூடப்பட்ட்தால் வருவாய் வருவதே இல்லை. என்பதை அனைவரும் அறிவீர்கள்.  எனவே மக்களிடம் பிரதமரும் நிதிக்குக் கோரிக்கை விடுக்கிறார்.  முதல்வரும் அதே கோரிக்கையை விடுக்கிறார்” எனப் பேசி உள்ளார்.

அவரது இந்த பேச்சு மாநிலம் முழுவதும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.  இந்த வீடியோவின் படி வர்மா உலக அளவிலான கொரோனா பாதிப்பு பற்றிக் கூறுகிறாரா அல்லது இந்திய அளவிலா என்பது சரியாகப் புரியவில்லை.  ஆனால் இது இரண்டு மட்டத்திலுமே மிகவும் தவறான தகவல் ஆகும்.   எனவே இதற்கு விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் கட்சியினர், பத்திரிகையாளர்கள் போன்றோர் வர்மாவுக்கு கேள்விகள் எழுப்பி உள்ளனர்.  ஆனால் அவர் இதற்குப் பதில் அளிக்கவில்லை.  மேலும் அவர் தனது மொபைலை  ஆஃப் செய்து வைத்துள்ளார்.

[youtube https://www.youtube.com/watch?v=ZDtKO9-kMEg]