நடிகரிடம் கெஞ்சிய பா.ஜ,க. எம்.எல்.ஏ…
மத்தியபிரதேச மாநில ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர், ராஜேந்திர சுக்லா. முன்னாள் அமைச்சரும் ஆவார்.
அந்த மாநிலத்தில் உள்ள சாத்னா பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் மும்பையில் வேலை பார்த்து வருகிறார்கள்.
அவர்களை மத்தியப்பிரதேச மாநிலத்துக்கு அனுப்பி வைக்குமாறு சினிமா நடிகர் சோனு சூட் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார், சுக்லா.
‘’ சோனு சூட் ஜி..எங்கள் பகுதி தொழிலாளர்கள் சுமார் நூறு பேர் மும்பையில் ஊரடங்கு காரணமாக ஊருக்கு வர முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை சாத்னா அனுப்பி வைக்க உதவுங்கள்.. ப்ளிஸ் ஹெல்ப் அஸ்’’ என எம்.எல்.ஏ.சுக்லா, நடிகர் சோனுவிடம், தனது டிவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டிருந்தார்.
‘’ உதவுகிறேன்’’ என பதில் அளித்திருந்தார், சோனு சூட்.
இந்த விவகாரம் மத்தியப் பிரதேசத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘’ ம.பி. தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு. அழைத்துவர ஆளும் பா.ஜ.க. அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே எம்.எல்.ஏ.வின் வேண்டுகோள் காட்டுகிறது’’ என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
பதிலுக்கு பா.ஜ.க. என்ன செய்தது தெரியுமா?
’ ,எங்கள் எம்.எல்.ஏ.வின் ட்விட்டரை,அவரது ’’டீம்’’ தவறுதலாகக் கையாண்டதால் ஏற்பட்ட பிழை இது’’ எனச் சமாளித்துள்ளது, பா.ஜ.க.