பிரதாப்கர், உ பி,
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் மோதி சிங் முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில பாஜக மூத்த தலைவரும் அமைச்சருமான மோதி சிங் முகநூலில் கணக்கு வைத்துள்ளார்.
அமைச்சருடைய முகநூல் கணக்கில் அவருடைய சகோதரிக்கு உடல்நிலை சரியில்லை எனத் தகவல் வெளியாகியது.
மேலும் இருவரிடம் சிகிச்சைக்காக தலா ரூ.25000 உதவி கேட்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பிரதாப்கர் நகரக் காவல் நிலையத்தில் அமைச்சரின் முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக அவரது உதவியாளர் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.