
பாட்னா
எதிர்க்கட்சிக்காரரகளை பயங்கரவாதி ஒசாமா பின் லாடனின் ஆதரவாளர்கள் என பாஜக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டி உள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா எதிர்க்கட்சிக்காரர்களும் பாகிஸ்தான் தீவிரவாதி ஹஃபிஸ் சையதும் சமமானவர்கள் என விமர்சித்திருந்தார். அது எதிர்க்கட்சி தலைவர்கள் இடையே கடும் பரபரப்பை உண்டாக்கியது. அவரது இந்த கருத்துக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றொரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான கிரிராஜ் சிங் தற்போது டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”மாவோயிஸ்டுகள், சாதி அரசியல்வாதிகள், ஒசாமா பின் லாடனின் ஆதரவாளர்கள் ஆகியோர் பாஜகவுக்கு எதிராக களம் இறங்கி உள்ளனர். அவர்களால் மோடியின் அரசை ஒன்றும் செய்ய முடியாது. முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் இந்த ஆட்சி 2019 லும் தொடரும்” என குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இதை கிரிராஜ் சிங் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]