ராய்ப்பூர்
நடுச்சாலையில் பிறந்த நாள் கொண்டாடிய ராய்ப்பூர் நகர பாஜக மேயரின் மகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாஜகவை சேர்ந்த மீனாள் சவுபே சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் மாநகர மேயராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சவுபே பதவியேற்ற சில மணி நேரங்களில், மேயரின் வீடு உள்ள சங்கோரபட்டா பகுதியில் மேயரின் மகன் மிரினாக் சவுபே, நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தி உள்ளார்.
மேலும்பட்டாசு சத்தமும் காதைப் பிளந்துள்ளதால் நள்ளிரவில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த காட்சிகள் வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்து. போலீசாரின் கவனத்துக்கும் சென்றது.
ராய்ப்பூர் மேயர் நடந்த தவறுக்காக வருத்தம் தெரிவித்தார். மேயரின் மகன் மற்றும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆயினும் அவர்கள் சிறிது நேரத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆளும் பா.ஜனதாவுக்கு எதிர்க்கட்சியினர் கண்டன கருத்துகளை பதிவு செய்தனர்.