டெல்லி: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் வயநாடு மக்களவை தொகுதி உள்பட இடைத்தேர்தல் நடைபெற்ற இடங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் உள்ளதாகவும், வயநாட்டில் பிரியங்கா காந்தி முன்னிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. அதே வேளையில், ஜார்க்கண்ட் மாநிலதில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதுபோல, வயநாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரால மாநிலத்தில், 288 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 147 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. மகா விகாஸ் அகாடி கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 23,464 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி ஆகியோர் பின்தங்கி உள்ளனர்.
பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் 3,984, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி 9,555, மற்றவை 256 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக கூட்டணி 35 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 31 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.