டெல்லி: பாஜக தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, அவரது தாய் இருவரும் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
சிந்தியா மற்றும் அவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா ஆகியோருக்கு தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து காய்ச்சலும் ஏற்பட்டது.
இதையடுத்து, சாகேத்தில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முதல் இருவரும் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர்.
அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா என்பதற்கான பரிசோதனை மேற்காள்ளப்பட்டுள்ளன. விரைவில் அதன் முடிவுகள் வெளியாகும் என்று தெரிகிறது.