தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியது.
இதையடுத்து மேல்முறையீடு செய்ய எச். ராஜா தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து அதுவரை அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறாக பேசியது மற்றும் பெரியார் சிலையை உடைப்பேன் என பேசி வெறுப்புணர்வை தூண்டியது தொடர்பாக ஈரோடு நகர காவல்துறை, மற்றும் கருங்கல்பாளையம் காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கு விசாரணை எம்.பி, எம்எல்ஏ க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த இரு வழக்கிலும் எச்.ராஜா குற்றவாளி என தீர்ப்பளித்து தலா 6 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து எச்.ராஜா தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்ய அவகாசம் கேட்டதால் எச்.ராஜா மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாஜக மூத்த தலைவர் எச் . ராஜாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு