டில்லி
பாஜகவின் ஐடி பிரிவு தவறான பல செய்திகளைப் பரப்பி வருவதாக தி பிரிண்ட் ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ள செய்தியின் முதல் பகுதி
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியாவில் தேசிய ஊரடங்கு அமலாக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்களில் பலர் இந்த ஊரடங்கால் பணிகளுக்குச் செல்ல முடியாத நிலை உண்டாகி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். குறிப்பாக வெளி மாநிலத் தொழிலாளிகள், வீடற்றோர், தினக் கூலி தொழிலாளர்கள் போன்றோர் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். ஆயினும் அனைவரும் கொரோனாவுக்கு எதிராக போராடுகின்றனர்
தற்போதைய நிலை குறித்து ஆங்கில ஊடகமான தி பிரிண்ட் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை விவரம் வருமாறு :
இந்தியா தன்னிடம் உள்ள அனைத்து வளங்களையும் கொரோனாவுக்கு எதிராகப் போராடப் பயன்படுத்தி வருகிறது. ஓட்டல்கள் மருத்துவமனைகளாகி உள்ளன. ரயில்கள் தனிமை வார்டுகள் ஆகி உள்ளன. தலைவர்கள் தகவல் தெரிவிப்பவர்கள் ஆகி உள்ளனர். மக்களை தற்போது வீட்டுக்குள்ளேயே இருக்க வைக்கும் பொறுப்பையும் காவலர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். மக்கள் முழு அடைப்பு விதிகளை பின்பற்ற எதிர்க்கட்சியினர் அரசுடன் ஒத்துழைக்கின்றனர். அனைவரும் ஒற்றுமையாக இருந்தாலும் பாஜக ஐடிபிரிவு தனித்து இருக்கிறது.
பிரதமர் மோடியின் அரசு கொரோனா பரவுதலை தடுக்கப் போர்க்கால நடவடிக்கைகள் எடுத்த போதிலும் பாஜகவின் ஐடி பிரிவு தவறான தகவல்களைப் பரப்பு வருகிறது. பாஜகவுக்கும் நாட்டுக்கும் இந்த பிரிவே எதிரியாக உள்ளது. இந்த பிரிவு மக்களவை தேர்தல் ஏதாவது வந்தால் கொரோனாவைக் கொண்டு வெல்வதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது.
கடந்த 2018 ஆம் வ்ருட்ம் அமித்ஷா தங்கள் கட்சி தொண்டர்கள் மக்களுக்கு எந்த ஒரு தகவலையும் எளிதில் பரப்பும் திறன் உடையவர்கள் எனக் கூறினார். பாஜகவுக்கு உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் 32 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அகிலேஷ் யாதவ் தனது தந்தையைக் கன்னத்தில் அறைந்ததாக வந்த பொய்ச் செய்தியை அவர்கள் நாடெங்கும் பரப்பியதை அப்போது நினைவு கூர்ந்தார்
பிரதமர் மோடி தனது மன் கி பாத் ரேடியோ நிகழ்வில் பல நிகழ்வுகள் பல வருடங்களாகத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் வேறு கோணங்களில் பரப்பப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாவதை ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். இது மோடி மற்றும் அமித்ஷாவுக்கு மிகவும் பழக்கமானதாகும். அப்படி இருக்க அவர்கள் தற்போதுள்ள நிலையில் கட்சியின் ஐடி பிரிவு ஏன் சரியான மற்றும் பயனுள்ள செய்திகளை அளிக்காமல் யாருடைய நடவடிக்கை சிறந்தது என பகிர்வது ஏன்?
பாஜக ஐடி பிரிவின் தலைவர் அமித் மாளவியா பதியும் பல டிவீட்டுகள் அர்த்தமற்றதாகவும் கேலிக்கு உள்ளாகும் படியும் உள்ளது. அவர் எழுந்த உடன் எந்த தவறான தகவலை பரப்பலாம் என்னும் எண்ணத்துடன் இருப்பதாகவே தெரிகிறது. ஏராளமான மக்கள் வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் போது அவர்களுக்கு மருத்துவம் தொடர்பான சரியான் தகவலை அளிக்காமல் தவறான தகவலை மட்டும் அவர் பரப்புகிறார். அவர் டிவிட்டுகளில் கொரோனா மருத்துவம் குறித்த தகவல்கள் இருப்பதில்லை.
– இந்த செய்தியின் அடுத்த பகுதி விரைவில்…