க்னோ

ற்போது நடைபெற்று வரும் உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்குப் பசுக்களால் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்துக்கள் பசுக்களைத் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.  பாஜக தொடர்ந்து பசுக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி வருகிறது.   கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக அரசு மத்தியில் ஆட்சியை பிடித்தது.   அப்போது முதல் வட மாநிலங்களில் பசுப் பாதுகாப்பு என்னும் பெயரில் மக்கள் அடித்துக் கொல்லப்படும் நிகழ்வு அதிகமாயிற்று.   மக்களால் கைவிடப்படும் பசுக்கள் வயல்களில் மேய்ந்து இழப்பை ஏற்படுத்த தொடங்கின.

பசுப் பாதுகாப்பைக் காரணம் காட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.   அம்மாநிலத்தில் பசுக்கள் கட்டுப்பாடின்றி வயல்களில் மேய்ந்ததால் விவசாயிகள் மாடுகளைப் பிடித்து பள்ளி, மருத்துவமனை, அரசு அலுவலகங்களில் அடைத்து வைத்ஹ்டன்ர்.  இந்த மாடுகள் முட்டி உயிர்கள் இழப்பு ஏற்படும் செய்திகள் வெளியாகியதால் உபி பாஜக அரசு மீது கடும் விமர்சனங்கள் எஉந்தன.

தற்போது உபி மாநிலச் சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.  நேற்று முன்தினம் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.  இதில் பாந்தா மாவட்டத்தில் உள்ள பூர்வா என்னும் சிற்றூரின் மக்கள் பசுக்கள் பிரச்சினையைக் காட்டி தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.  மேலும் 3 கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் கைவிடப்பட்ட பசுக்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன.

இதனால் பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதையொட்டி பிரதமர் மோடி உபியில் பசுக்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அறிவித்தார். மேலும் உபி முதல்வர் யோகி கைவிடப்பட்ட பசுக்களைப் பராமரிக்க விவசாயிகளுக்கு ரூ. 900 முதல் ரூ.1000 வரை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.  இந்த இரு அறிவிப்புக்களால் ஏதும் மாற்றம் வந்தால் மட்டுமே பாஜக வெற்றி அடையும் என்னும் நிலை உபியில் உள்ளது.