
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 28 சட்டமன்ற தொகுதிகளில், தற்போதைய நிலவரப்படி 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது ஆளும் பாரதீய ஜனதா.
ஆட்சியைத் தக்கவைக்க வேண்டுமெனில், குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் வென்றால் போதும் என்ற நிலையில், தற்போது 21 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், உள்கட்சித் தவறுகளால் இழந்த ஆட்சியை மீட்க வேண்டுமெனில், குறைந்தபட்சம் 21 இடங்களில் வெல்ல வேண்டுமென்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி 6 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
இந்த முன்னணி நிலவரத்தில் மாற்றம் இருந்தாலும்கூட, முடிவுகள் எப்படியேனும் பாரதீய ஜனதாவுக்கே சாதகமாக இருக்கும் என்பதே பொதுவான அரசியல் கணிப்பு.
உள்கட்சிப் பிரச்சினையை புத்திசாலித்தனமாக கையாளாமல், கமல்நாத்தை தட்டிவைத்து, சிந்தியாவிடம் கொஞ்சம் விட்டுக்கொடுத்து சென்றிருந்தால், ஒரு பெரிய மாநிலத்தை, காங்கிரஸ் கட்சி அநியாயமாக இழந்திருக்க வேண்டாம் என்பதே அரசியல் வல்லுநர்களின் விமர்சனம்.
மேலும், குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரை, இடைத்தேர்தல் நடைபெற்ற 8 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆளும் பாரதீய ஜனதாவே, தற்போதைய நிலவரப்படி முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]