னாஜி

னது பணபலத்தால் பாஜக கோவாவில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில தலைவர் கிரிஷ் சோடங்கர் கூறி உள்ளார்.

மனோகர் பாரிக்கர் மறைவை ஒட்டி பாஜக கூட்டணி பெரும்பான்மை இழந்துள்ளது என்பதால் காங்கிரஸ் ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்தது. ஆயினும் பாஜக தனது கூட்டணிக் கட்சியினர் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. அப்போது காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் இசிடோர் பெர்னாண்டஸ் பதவி விலகி பாஜகவில் இணைவார் எனவும் சொல்லப்பட்டது.

ஆனால் திடீரென மனதை மாற்றிக் கொண்ட பெர்னண்டஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என அறிவித்தார். அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகப் போவதாக அறிவித்த இரு உறுப்பினர்களும் தங்கள் ஆதரவை தொடர உள்ளதாக தெரிவித்தனர்.

இது குறித்து கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர், “பாஜகவினர் தங்களால் தொடர்ந்து ஆட்சி அமைக்க முடியாது என்பதைதெரிந்துக் கொண்டனர். அதனால் தங்கள் பண பலத்தை காட்டி கூட்டணி கட்சியினரை மிரட்டி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளனார். மக்களின் தீர்ப்பை மதிக்காமல் பாஜக நடந்துக் கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.