டில்லி:

தேர்தல் வெற்றியை தொடர்ந்து, புதிய ஆட்சி அமைக்கும் வகையில், தற்போதைய ஆட்சியை கலைக்க பரிந்துரை செய்யும் வகையில்,  இன்று பிற்பகல் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடை பெற உள்ளது.

17வது மக்களவையை கட்டமைப்பதற்கான லோக்சபா தேர்தல்   நாடு முழுவதும் உள்ள   543 தொகுதி களுக்கு, 7 கட்டங்களாக தேர்தல்  நடைபெற்று வந்தது. பணப்பட்டுவாடா காரணமாக தமிழகத்தின் வேலூர் தொகுதி மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளிலும் தேர்தல்  வாக்குப்பதிவு ள் கடந்த 19ந்தேதியுடன் முடிவடைந்தன.

அதையடுத்து நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மக்களவை தேர்தல் : பாஜக கூட்டணி கட்சிகள் 352 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 303 தொகுதிகளில் பாஜக தனித்து வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சியே பதவி ஏற்க உள்ளது.

17-வது மக்களவை அதாவது புதிய அரசு ஜூன்  மாதம் 3ம் தேதிக்குள் பதவியேற்க வேண்டிய திருப்பதால், புதிய அரசு அமைக்கும் வகையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. இதில் 16வது மக்களவையை கலைக்க பரிந்துரைக்கும் வகையில்,  தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்

அதைத்தொடர்ந்து, ஜனாதிபதி 16-வது மக்களவையை கலைத்து உத்தரவு பிறப்பிப்பார். அதன் பின்னரே புதிய அரசு பதவி ஏற்கும்.