டில்லி:

மத்தியில் 2014ம் ஆண்டு பாஜக ஆட்சியை பிடித்தது. அதன் பின்னர் வட கிழக்கு மாநிலங்களை பாஜக தொடர்ந்து ஆட்சி அமைத்து வருகிறது.

அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மணிப்பூர், அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக தனது ஆதிக்கத்தை செலுத்திவிட்டது. இந்த பகுதியில் தற்போது மிசோராம் மாநிலம் மட்டுமே எஞ் சியுள்ளது. இந்த மாநிலத்தையும் கைப்பற்ற பாஜக மேலிடம் கடந்த பிப்ரவரி முதல் பணியை தொடங்கிவிட்டதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கென்று ஒரு குழு மிசோராமில் முகாமிட்டுள்ளது. கட்சியின் வேர் முதல் வலுப்படுத்தும் பணியை அ க்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவில் வடகிழக்கு பொதுச் செயலாளர் ராம் மாதவ் அ டுத்த ஒரு மாதத்தில் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

40 உறுப்பினர்களை கொண்ட மிசோராம் சட்டமன்றத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களோடு சேர்த்து மிசோராமுக்கும் தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.