பெங்களூரு

பாஜக ஆட்சி செய்யும் கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு முகக்கவசம் இன்றி கடைக்குச் சென்ற வீடியோ சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

மத்திய பாஜக அரசு கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ள மக்கலுக்குப் பல அறிவுரைகள் வழங்கி உள்ளது.  குறிப்பாக மக்கள் வெளியில் செல்லும் போது முகக் கவசம் இன்றி செல்லக்கூடாது என வலியுறுத்தி உள்ளது.  இதையே பல மாநிலங்களிலும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.    இதை மீறுவோர் மீது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

 இந்நிலையில் பாஜக ஆளும் கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு முக கவசம் இல்லாமல்  கடைவீதிக்குச் சென்றுள்ளார்.  அங்கு அவர் ஒரு கடையில் ஆய்வு செய்யும் போதும் முகக் கவசம் அணியாமல் ஆய்வு நடத்தியுள்ளார்.    இந்த வீடியோ வலைத் தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த 2 ஆம் தேதி அன்று அமைச்சர் ஸ்ரீராமுலு முகக் கவசம் அணியாமல் தனது ஆதரவாளர்களுடன் கொரோனா விழிப்புணர்வு குறித்து மக்களிடம் உரையாற்றி உள்ளார்.  அப்போது அவர்கள் யாரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வில்லை எனக் கூறப்படுகிறது.  இந்நிலையில்  அன்று அவர் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசத்தின் அவசியம் குறித்து உரையில் வற்புறுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

[youtube https://www.youtube.com/watch?v=tIsyZWX7q88]