பாட்னா: பீகாரின் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தேர்தல் அறிக்கை, பெரிய கூட்டணிக் கட்சியான பாரதீய ஜனதாவின் நெருக்குதலால் இன்னும் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு, பொது சிவில் சட்டம் மற்றும் அயோத்தியில் ராமர் கோயில் போன்ற விஷயங்களில், தங்களுடைய தேர்தல் அறிக்கைக்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டுமென பாரதீய ஜனதா சார்பில் வற்புறுத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.கவுடன் நீண்ட நாட்கள் கூட்டணிக் கட்சியாக இருந்தபோதிலும், அது மதசார்பற்ற கட்சியாகவே இருந்து வருகிறது. மேற்கண்ட மூன்று அம்சங்களிலும், அக்கட்சியின் நிலைப்பாடுகள், பாரதீய ஜனதாவிடமிருந்து மாறுபட்டவை.
ஆனால் தற்போது எதிர்பாராத நெருக்கடி ஏற்படுவதால், நிலைமையை எப்படி சமாளிப்பது என தெரியாமல், அறிக்கை வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது அக்கட்சி.
– மதுரை மாயாண்டி