ண்டிகர்

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் அனில் ஜோஷி பாஜகவில் இருந்து 6 வருடங்களுக்கு நீக்கப்பட்டுள்ளார்

நாடெங்கும் வேளான் சட்டங்களை எதிர்த்துத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.  சர்ச்சைக்குரிய இந்த சட்டங்களை நீக்கச் சொல்லி டில்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய பாஜக அரசு ஏற்க மறுத்து வருகிறது.   இந்த போராட்டத்துக்கு பல எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

பாஜகவைச் சேர்ந்த பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரான அனில் ஜோஷி விவசாய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.   முந்தைய பாஜக – அகாலி தள கூட்டணி ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராகப் பணி புரிந்த அனில் ஜோஷி கடந்த 2017 தேர்தலில் தோல்வ்ல் அடைந்தார்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் அவர்மீது பாஜக தலைமை கட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் செய்வதாகக் குற்றம் சாட்டியது.  அவருக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டு இரு நாட்களில் பதில் அளிக்க உத்தரவிட்டது.    ஆனால் அவருடைய பதில்கள் திருப்தியாக இல்லை எனவும் ஜோஷி பதில் அளிக்காமல் மேலும் கேள்விகள் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகின

இதையொட்டி மாநில பாஜக செயலர் சுபாஷ் சர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனில் ஜோஷி கட்சியில் இருந்து 6 வருடங்களுக்கு நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.   இது குறித்து ஜோஷி, “கடந்த 35 வருடங்களாக நான் பாஜகவில் இருக்கிறேன்.  நான் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்ததற்காக இந்த தண்டனையை பெற்றுள்ளேன்.  தொடர்ந்து விவசாயிகளை ஆதரிப்பேன்” எனக் கூறி உள்ளார்.