டில்லி:

பாஜக ஆட்சி கேம் சேஞ்சர் கிடையாது, வெறும் நேம் சேஞ்சர் தான் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

ராஜ்யசபாவில் பாஜக தலைவர் அமித்ஷா இன்று தனது கன்னி பேச்சில் காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத் பதலடி கொடுத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘ அமித்ஷாவின் கன்னி பேச்சுக்கு வாழ்த்துக்கள். காங்கிரஸ் ஊழல் கட்சி என்று கூறினீர். ஆனால் பாஜக ஆட்சியில் தான் 2-ஜி வழக்கு விடுதலை ஆகியுள்ளது. நாட்டின் சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. சட்டம் தனது பணியை செய்யும்.

பாஜக அரசு ‘கேம் சேஞ்சர் கிடையாது. வெறும் நேம் சேஞ்சர் (பெயர் மாற்றம்) தான். 1985ம் ஆண்டு பின்னர் காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களுக்கு தங்களது பெயரை வைத்துக் கொள்கிறது,” என்றார்.