மும்பை:
பாஜகவின் அரசியல் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த மகாராஷ்ட்டிர எம்எல்ஏ அனில் அண்ணா கோட்டே கட்சியிலிருந்து விலகினார்.

மகாராஷ்ட்டிர மாநிலம் துலே தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் அனில் அண்ணா கோட்டே. இவர் பாஜகவிலிருந்து திங்களன்று விலகினார்.
அதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சியின் மாநில தலைவருக்கு அனுப்பினார். கட்சியின் கொள்கை மற்றும் அரசியல் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்ததால், கட்சியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
துலே மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரேவை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel