சென்னை:
பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பகோரி பாரதியஜனதா இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகளில் முதல்வர்கள் கிடையாது. பல்கலைக்கழகங்களில் வேந்தர்கள் கிடையாது. இதன் காரணமாக மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது.
தமிழகம் முழுவதும் 89 கலை அறிவியல் கல்லூரிகளில் 50 க்கும் மேற்பட்ட முதல்வர் பதவி மற்றும் 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் பதவி, மற்றும் காலியாக உள்ள 3200 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தமிழக கல்வி துறையில் பல்வேறு குளறுபடிகள், முறைகேடுகள் உள்ளன. கல்வித்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும், 2 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. அதை உடனே நிரப்ப நடவடடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.