2021–22ல், அரசு திட்டங்களின் பெயரை பயன்படுத்தி பாஜக ‘கட்சிநிதி’ வசூலித்தது ஆர்.டி.ஐ. மூலம் தெரியவந்துள்ளதாக தி வயர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சத்தியம் தொலைக்காட்சி செய்திஆசிரியர் பி.ஆர். அரவிந்தக்ஷன் RTI மூலம் எழுப்பிய கேள்விகளுக்குக் கிடைத்த பதிலில் இது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதில் மேற்கோள்காட்டியுள்ளது.

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் “மைக்ரோ டொனேஷன்” திட்டத்தில் பங்கேற்க தங்கள் சமூக வலைதள பதிவுகள் மூலம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து, Swachh Bharat, Beti Bachao Beti Padhao, Kisan Seva போன்ற அரசு நலத்திட்டங்களுக்கு பணம் செல்கிறது என்ற நம்பிக்கையில், மக்கள் NaMo ஆப் மற்றும் narendramodi.in வழியாக நன்கொடை வழங்கினார்கள்.

ஆனால், அந்த நிதி அரசுக்கு போகாமல் நேரடியாக பாஜக மைய அலுவலகத்திற்கே சென்றது என ரசீதுகள் காட்டின.

அதேவேளையில், இந்த மூன்று திட்டங்களையும் நடத்தும் மத்திய அமைச்சகங்கள் “BJP-க்கு நிதி சேகரிக்க எந்த அனுமதியும் தரப்படவில்லை” என்று RTI-யில் தெளிவாகக் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், அரசுத் திட்டங்களின் பெயரை மோசடியாகப் பயன்படுத்தி பொதுமக்களை தவறாக நம்ப வைத்து பாஜக நிதி சேர்த்ததாகக் கூறப்படுகிறது.

பாஜக-வின் இந்த செயல் நம்பிக்கை துரோகம், cheating மற்றும் அரசியல் நிதி சட்ட விதி மீறல் என்று அரவிந்தக்ஷன் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் காவல்துறை, மத்திய அமைச்சகங்கள், பாஜக தலைமை என அனைவருக்கும் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக பதில் அளிக்காத நிலையில், “அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நேரடியாக கோர்ட்டிற்குச் செல்வேன்” என்று கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]