உக்ரைனுக்கு எதிரான போரில் இறங்கியுள்ள ரஷ்யா-வுக்கு பிட்காயின் மூலமாக நிதி கோரி பதிவு பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது.

சிறிது நேரம் கழித்து இந்த பதிவு நீக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து ஜெ.பி. நட்டாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தெரியவந்தது.

ஹேக்கர்களிடம் இருந்து தற்போது இந்த கணக்கை மீட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் ஜெ.பி. நட்டாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பிட்காயின் தொடர்பான தகவல் இடம்பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஹேக் செய்யப்பட்டு மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.