ஐதராபாத்
பாஜக வேட்பாளர் ரகுநந்தன் ராவின் மைத்துனரான சுரபி சீனிவாஸ் இடம் இருந்து ரூ. 1 கோடி மதிப்பிலான ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள துபக்கா நாடாளுமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தொகுதியில் பாஜக சார்பில் ரகுநந்தன் ராவ் போட்டி இடுகிறார்.
அவருடைய மைத்துனரான சுரபி சீனிவாஸ் என்பவர் பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விவேகா வெங்கடசாமி என்பவரிடம் பணி புரிந்து வந்தார்.
சித்திப்பேட்டை அருகே சுரபி சீனிவாஸ் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது காவல் துறையினர் அந்த வாகனத்தைச் சோதனை செய்துள்ளனர்.
அந்த வாகனத்தில் இருந்து ரூ.1 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி சுரபி சீனிவாஸ் மற்றும் அவருடைய வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பணம் வாக்காளர்களுக்கு அளிக்க எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
[youtube https://www.youtube.com/watch?v=p8gLUbvFbms]
[youtube-feed feed=1]