லக்னோ:

க்களின் பசியை போக்க நடவடிக்கை எடுக்காமல் தேர்தலிலேயே பாஜக அரசு கவனம் செலுத்துவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

பிற மாநிலங்களில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் சில நாள்களாக உத்திர பிரதேசத்தில் நடந்தன. அவற்றையும் வேலையின்மையையும் தொடர்புபடுத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் அகிலேஷ் யாதவ் கருத்து பதிந்துள்ளார்.

அதில், தற்கொலைச் சம்பவங்களின் மூலமாக உத்திர பிரதேசத்தில் வேலையின்மை ஒரு பெரும் பிரச்னையாக எழுந்துள்ளது.

கொரோனாவின் தாக்கத்தை மறந்துவிட்டு பாஜக தேர்தல்களில் கவனம் செலுத்தி வருகிறது. வேலை வாய்ப்பின்மையையும் மக்களின் பசியையும் ஒரு பிரச்னையாகவே பாஜக கருதாதபோது, எப்படி அவற்றைத் தீர்க்கப் போகிறது. விரைவில் பிகார் தேர்தல் வர உள்ளது, சில தினங்களுக்குப் பிறகு ‘நட்சத்திர பேச்சாளர்கள்’ மீண்டும் பறக்கத் தொடங்கிவிடுவார்” என்று கூறியுள்ளார்.