டில்லி:
பா.ஜ துணை ஜனாதிபதி வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடந்தது.
இதில் ஆளும் பா.ஜ சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிட்டனர். இதை தொடர்ந்து அடுத்த மாதம் 5ந் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எதிர் கட்சிகள் சார்பில் கோபால் கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார்.
இன்று மாலை பாஜ உயர் மட்டகுழு கூட்டம் நடந்தது வருகிறது. இதில் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கைய நாயுடு தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.