பெங்களுரு
கர்நாடகா சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தலுக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக இரு கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்து பாஜகவை சேர்ந்த எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார். அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் நம்பிக்கை வாக்கெடுப்பை கோராமலேயே அவர் ராஜினாமா செய்தார். அதன் பிறகு காங்கிரஸ் ஆதரவுடன் மஜத தலைவர் குமாரசாமி முதல்வராக நேற்று பதவி ஏற்றுள்ளார்.
நாளை சட்டப்பேரவை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக சார்பில் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ்குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரை தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் கே ஆர் ரமேஷ்குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ரமேஷ்குமார் 1994-99ஆம் ஆண்டுவரை ஏற்கனவே சபாநாயகராக இருந்தவர்.
இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு கர்நாடகா சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கு கோர வேண்டும்.