டெல்லி

பாஜக கூட்டணி மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ளது.

சமீபத்தில் மாநிலங்களவையில்பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 6 நியமன உறுப்பினர்களை நியமித்துள்ளது.  எனவே இவர்களின் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்றுள்ளதால் வக்ஃப் திருத்த மசோதா போன்ற முக்கிய சட்டங்களுக்கு ஒப்புதல் பெற பா.ஜனதா கூட்டணிக்கு உதவும் என்று கூறப்படுகிறது.

நடந்து முடிந்த இடைத்தேர்தலுக்குப் பிறகு, மாநிலங்களவையின் பலம் 234 ஆக உள்ளது (மொத்த பலம் 12 நியமன உறுப்பினர்கள் உள்பட – 245). பா.ஜ.க. 96 உறுப்பினர்களுடன் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக உள்ளது. தேசிய ஜனநாயக எம்.பி.க்களின் எண்ணிக்கை 113.

இதில் 6 நியமன உறுப்பினர்கள், வழக்கமாக அரசாங்கத்துக்கு ஆதரவாகவே வாக்களிக்கிறார்கள், எனவே தேசிய ஜனநாய கூட்டணி பலம் 119 ஆக உயர்ந்துள்ளது. இது பெரும்பான்மைக்கு தற்போது தேவையான 117ஐ விட இரண்டு அதிகம் ஆகும்.

மாநிலக்களவையில் காங்கிரசுக்கு 27 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளின் 58 உறுப்பினர்களை சேர்த்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி எண்ணிக்கை 85 ஆக உள்ளது. 9 உறுப்பினர்களைக் கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், 7 உறுப்பினர்களைக் கொண்ட பி.ஜே.டி.யும் யாரையும் ஆதரிக்காமல் உள்ளனர்.

மேலும் 4 அதிமுக உறுப்பினர்கள், 3 சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இரண்டு அணியிலும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.