டில்லி,
பறவை காய்ச்சல் எதிரொலியாக டில்லியில் இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் காரணமாக ஏராளமான பறவைகள் உயிரிழந்தன. இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது.
இதற்கிடையே டெல்லி ராஜ்கோட்டில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவிடமான ‘சக்தி ஸ்தாலில்’ கடந்த வாரம் பறவை காய்ச்சல் காரணமாக ஏராளமான வாத்துகள் உயிரிழந்தன.
டெல்லி வளர்ச்சி துறை மந்திரி தலைமையில் அதிகாரிகள் அங்கு நேரில் பார்வையிட்டு பரிசோதனை முடிவுகள் வரும் வரை இந்திரா காந்தி நினைவிடத்தை மூட உத்தரவிட்டனர்.
இதனால் கடந்த வாரம் ‘சக்தி ஸ்தலம்’ மூடப்பட்டது.
இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று.
இந்திரா காந்தி நினைவிடமான ‘சக்தி ஸ்தலம்’ மூடப்பட்டதால் இந்த வருடம் இந்திரா காந்தி நினைவு தினம் அங்கு அனுசரிக்கப்படாது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.