செக்ஸ் குற்றச்சாட்டு: யோகா குருவுக்கு அரஸ்ட் வாரண்டு!

 

வாஷிங்டன்,

மெரிக்காவின் பிரபல யோகா குருவான பிக்காராம் சவுத்திரிக்கு வாஷிங்டன் நீதிபதிகள் அரஸ்ட் வாரண்டு பிறப்பித்துள்ளனர்.

பாலியல் குற்றச்சாட்டு ஒன்றில் இந்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

70 வயதான பிகாராம் சவுத்ரி ஹாட் யோகா ஒன்று ஒரு யோகாவை அறிமுகப்படுத்தி யிருந்தார். கடந்த 2002ம் ஆண்டு இந்த யோகா பிரபலமானது.

இந்த யோகா சூடான அறைக்குள் செய்யப்பட்டு வந்தது. இது மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது.

பிகாராம் சவுத்திரியால் உருவாக்கப்பட்ட இந்த யோகா மிகவும் சூடான அறையில் செய்யப்படும். இதில் 26 வகையான யோகா செய்யப்படும்.

சுமார்  90 நிமிடம் நடைபெறும் இந்த  வகுப்புகள் அனைத்து சரியாக 105F (40.5C) சூடான அறைகளில் அதே வழியில் கற்றுதரப்பட்டு வந்தது.

இந்த யோகா பயிற்சியை மேற்கொள்பவர்கள் இறுக்கமான, மெல்லிய மேலாடைகளும்,  சிறிய கருப்பு பேண்ட்களை அணிந்துகொள்ள வேண்டும்.

இந்த யோகா அமெரிக்காவில் பிரபலமடைந்தது.

இந்த யோகா நிறுவனத்தில் ஜாஃபா-போட்டன் என்பவர் 2011 ஆம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டு வரை லாஸ் ஏஞ்சல்ஸ் யோகா பள்ளியில் சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களின் தலைவராக இருந்தார்.

கடந்த 2012-2014ம் ஆண்டின்போது தன்னை யோகாகுரு மீது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் யோகா குரு கலிபோர்னியாவை விட்டு தலைமறைவானார்.

இந்நிலையில் யோகா குரு பிகாராம் சவுத்திரிக்கு வாஷிங்டன் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.

 


English Summary
Bikram Choudhury: Judge issues arrest warrant against yoga founder