BIHAR LIQUOR BAN
பீகாரில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனக் கூறி, நிதிஸ்குமார்-லல்லு கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்தது. அவர்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தற்பொழுது பீகார் அரசு, முதல் கட்டமாக நாட்டுச் சரக்குகளைத் தடை செய்ததுடன் வெளிநாட்டுப் பானங்கள் விற்பனையிலும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது குறித்த செய்தியை ஏற்கனவே பத்திரிக்கை.காமில் பதிவு செய்திருந்தோம். (படிக்க இங்கே சொடுக்கவும்.)
BIHAR 2
இது பீகார் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இது குறித்த கள நிலவரத்தை நமக்கு தருகின்றார் நமது நியூஸ்குருவி.

bihar 1 women celebrate
மகிழ்ச்சி வெள்ளத்தில் பெண்கள்

பீகார் பாபுவாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றும் தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சார்ந்த மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ள சாந்திதேவி வெள்ளிக்கிழமையன்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார். அவரது கணவர் நானக் ராம் ஒருக்காலத்தில் 400மில்லிக்கும் அதிகமாக குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்ததால் தற்பொழுது இரப்பை பாதிக்கப்பட்டு செஞ்சிலுவை மருத்துவர் அர்.பி.சிங்கிடம் சிகிச்சைபெற்று வருகின்றார்.
தற்பொழுது பீகாரில் நாட்டுச்சரக்குகள் தடைசெய்யப்பட்டு விட்டதால் தம் கணவர் மது அருந்தக் காசுக் கேட்டு தம்மைத் துன்புறுத்துவதில்லை என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மதுப்பழக்கம் எங்கள் வாழ்க்கையை நரகமாக்கி விட்டது என்றும் கண்ணீர் பொங்க கூறிய தேவி,  எங்களைப் போன்ற ஏழைக்குடும்பங்களை சீரழிவில் இருந்து  காத்த முதல்வர் நிதிஷ் குமார் அவர்களுக்கு  கோடானக் கோடி நன்றி “ என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இதனை சாந்திதேவி மட்டும் தனியாளாய்க் கூறவில்லை.
தெற்கு மலைக்கிராமங்களில், குறிப்பாக கைமூர் மற்றும் ரொஹ்டாஸ் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏழைப்பெண்கள் இந்த மதுவிலக்கினால் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
bihar- shop closed- food sold outside
உணவகமாய் மாறிய மதுக்கடை

BIHAR NITISH
பீகார் முதல்வர் நிதிஸ்குமார்

BIHAR LIQUOR BAN 2
எஸ்.வி.பி.கல்லூரி பேராசிரியரும், பெண்ணுரிமைப் போராளியுமான கம்லா சிங் இந்த தடையினை பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்னுரிமைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்கத் தடை என்று வர்வேற்றுள்ளார். ஆனாலும், இது எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியப்படுத்தப் படும் என தெரியவில்லை என்று கவலை தெரிவித்தார்.
மதுபானியில் உள்ள மிதாலி ஓவியக்கல்லூரி பயிற்சியாளராய் பணியாற்றும் ராணீ ஜா கூறுகையில்,  இந்த்த் தடை, கள்ளச்சாராயத்தையும், கருப்புச் சந்தையையும் ஊக்குவிக்கும். மேலும், பலர் கள்ளச்சாராயத்தால் மடிவர் என் நான் அஞ்சுகின்றேன்” என்றும் கவலை தெரிவித்தார்.
குடிகாரர்களால் அடிக்கடி கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகிய ஜமிரா மற்றும் சனாதியா கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் மகிழ்ச்சியில் திளைப்பது  வெளிப்படையாகத் தெரிந்தது.
BIHAR MAP 1
bihar 1 bottle broken
உடைக்கப்படும் மது பாட்டில்கள்

 
 
கள்ளச் கசாராயம் விற்கப் படுவதை தடுக்க கோரி நாங்கள் நடத்திய தொடர்ச்சியான போராட்டம் மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் பயனாய் இந்தத் தடை எங்கள் செவிகளில் தேனாய் வந்தது பாய்கின்றது. இந்த வெற்றி, நறுமணமாய் புத்துணர்ச்சியைத் தருகின்றது.
 
முசாஃபர் நகர் பெண்கள் முழு மதுவிலக்குக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் எங்கிறார் சமூகசேவகர் ரித்து ராஜ்.
மகிளா சாமக்யா எனும் பெண்கள் அமைப்புடன் இணைந்து கள்ளச் கசாராயம் விற்கப் படுவதை தடுக்க கோரி விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை துவக்கிய இந்து பாலா  கூறுகையில், இந்த்த் தடை, குரானிப் பகுதியில் உள்ள டார்சென் கிராமத்தில் தாம் செய்த தொடர் பிராக்சரத்தின் பயனாய்  விழைந்துள்ளதில் மகில்ச்சி என்றார்.
கயா வில் நடைப்பெற்ற மதுவிலக்கு பேரணியில் கலந்துக் கொண்ட மோகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுகியா தேவி கூறுகையில்,  இனி என் குடும்பத்தினர், குறிப்பாக என் குழந்தைகள் இனி மதுவுக்கு அடிமையாக இருக்க மாட்டார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். ஒருக்காலத்தில் அவர்கள் குடிக்கு அடிமையாகி சீரழிந்து கிடந்தனர். தற்பொழுது, மதுவைத் தொட மாட்டோம் என சத்தியம் செய்துள்ளனர்.” என்றார்.
கயா வைச் சேந்த பள்ளி ஆசிரியை ஒருவர், தம்முடைய கணவர், ஜே.பி.என். மருத்துவமனையில் துவக்கப் பட்டுள்ள மது-மறுவாழ்வு மையத்தில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மதுபாட்டில்களை இனி தொட மாட்டேன் என சத்தியம் செய்துள்ளதாகவும் கூறினார்.
என் குடிகாரக் கணவர் திருந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், பட்டுப்போன என் திருமண வாழக்கை மீண்டும் துளிர் விடும்” எனும் போது அவ் அர் கண்களில்  கருவானில் வெளிப்படும் நட்சத்திரமாய் நம்பிக்கை ஒளி பிரகாசித்தது.
கயாவில் உள்ள பிதாமகேசஸ்வர் அருகில் உள்ள தாழ்த்தப் பட்டோர் குடியிருப்பில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் மதுப்பழக்கத்தை துறப்பதாக உறுதி பூண்டுள்ளனர்.
சமூக அமைப்பைச் சேந்த வித்யா தேவி கூறுகையில், “ இந்தத் தெருவில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையாய் இருந்தனர். தற்பொழுது மதுத்தடை மூலம், அவர்கள் பூண்டுள்ள சத்தியத்தை காப்பது எளிதாக இருக்கும்”.
 
சாரிகா சுக்லா எனும் சமூகப் போராளி கூறுகையில், “மதுவினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களைக் கொண்ட ஹாஜிப்பூர் கிராம  பெண்களிடையேயும் இதேப் போன்ற வெற்றிக்களிப்பை காண முடிந்தது.”  என்றார்.
காய்கறி விற்கும் ரேணுகாதேவி கூறுகையில், “என்னுடைய கணவர் முதன் முறையாக என்னுடன் இணைந்து காய்கறி விற்பனையில் ஈடுபட்டுள்ளார்” என்றார் பெருமிதத்துடன்.
அதேவேளையில் இந்தத் தடை பலருக்கு காலம் கடந்தே வந்துள்ளது.
என் குடிகாரக் கணவன் என்னை தினமும் அடித்து துன்புறுத்தியதால், திருமண வாழ்வை முறித்து, கடந்த இருபது வருடமாக என் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றேன். என் இரு குழந்தைகளைத் தனியாக வீட்டு வேலைச் செய்து வளர்த்து வருகின்றேன். என் இலைய மகன், சமீப காலமாக குடிக்கு அடிமையாகி விட்டான்” என்றார்,  அவரது குரலில் உள்ள ஏமாற்றம் இந்தத் தடை 20 ஆண்டுகளுக்கு முன்னால் வந்திருந்தால் தம்முடைய வாழ்வு நிம்மதியாக கழிந்திருக்கும் என்கிற ஏக்கத்தை வெளிப்படுத்தியது.
எனினும், இந்தத் தடை ஒரு மைல்கல் முடிவு என வர்ணிக்கப் படுகின்றது.
ஒரு பெண்கள் நல மையம் மற்றும் ஒரு பெண்கள் சுயஉதவிக்குழு நடத்தும் மம்தா சிங் கூறுகையில், “ இந்த தடையினால் பெண்கள் மிகுந்த னிம்மதி அடைந்துள்ளனர். அவர்கலது மகிழ்ச்சியை அடுத்த தேர்தலில், நிதிஷ் குமாரை மீண்டும் தேர்ந்தெடுத்து வெளிப்படுத்துவார்கள் என்றார்.
(பாபுவா, ஆரா, முசாஃபர்னகர், கயா, ஹாஜிபூர், பகல்பூர், தர்பங்கா மக்கள் கருத்துக்களின் படி).
 
தமிழகத்தில், அ.தி.மு.க மற்றும் திமுக மாறி மாறி ஆட்சி செய்துவந்தாலும், அந்தக் கட்சியினரே மது ஆலைகளை நடத்தி கொள்ளை அடித்து வருவதால்,இவர்களால் தமிழகத்தில் மதுவிலக்கைக் கொண்டுவரமுடியுமா என்பது கேள்விக்குறியே.
மக்கள் நலக் கூட்டணி மற்றும் பா.ம.க. மதுவிலக்குக் கொள்கையை கொண்டிருந்தாலும் அவை  ஆட்சியைப் பிடிக்குமா என்பது  சந்தேகமே !
எனினும், பீகாரில் நிதிஸ் குமார் எடுத்துள்ள முன்முயற்சியை பத்திரிக்கை.காம் வரவேற்கின்றது.