பாட்னா:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பீகார் மாநிலத்தில் 100 மணி நேரத்தில் 11,244 கழிப்பறைகளை கட்டி அதிகாரிகள் சாதனை படைத்துள்ளனர்.
ஏற்கனவே 100 மணி நேரத்தில் 1000 கழிப்பறைகளை தெலுங்கானா மாநிலம் சாதனை படைத்த நிலையில், அதை முறியடித்துள்ளது பீகார் மாநிலம்.
மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்றதுமுதல் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி வருகிறது. அதன்படி வரும் 2019ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டிருக்க வேண்டும என்றும், திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலை உருவாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
மத்திய அரசின் இந்த திட்டத்தின்படி அனைத்து மாநில அரசுகளும், கழிப்பிடம் இல்லாத பகுதிகளில் அரசு சார்பில் கழிப்பிடங்களை கட்டி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் தெலுங்கானா மாநிலததில் 100 மணி நேரத்தில் 10,000 கழிப்பறைகள் கட்டப்பட்டது. இது சாதனையாக கூறப்பட்டது. இந்நிலையில் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசு, 100 மணி நேரத்தில் 11,244 கழிப்பறைகள் கட்டி சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில அமைச்சர், இந்த சாதனை நிறைவேற உறுதுணையாக இருந்தது அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள தான். அவர்களது மன உறுதியால் இதை சாதிக்க முடிந்தது. மாநிலத்தில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை விரைவில் உருவாகும் என கூறினார்.