பாட்னா :

243 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்தபோது இவர்கள், தங்களை பற்றிய புள்ளிவிவரங்களுடன் கூடிய “அபிடவிட்டை” தாக்கல் செய்திருந்தனர்.

அதன் அடிப்படையில், புதிய எம்.எல்.ஏ.க்களில் 163 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அவர்களில் 123 பேர் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கட்சி வாரியாக கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விவரம் :

ஆர்.ஜே, டி: – 54
பா.ஜ.க._ 47
ஐக்கிய ஜனதா தளம் – 20
காங்கிரஸ் – 16

– பா. பாரதி