டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தல் தொல்வி மற்றும் கட்சி நடவடிக்கைகள் குறித்து, காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது. காலை 11 மணிக்கு காணொளி மூலம் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் அதிகரித்துள்ள காற்றுமாசு காரணமாக, ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சோனியாகாந்திக்கு, மேலும் உடல்நலம் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில், அவரை வேறு மாநிலத்துக்கு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து, அவர் ராகுலுடன், கோவா மாநிலம் பனாஜியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நாளை காணொளி காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தகூட்டத்தில் பீகார் தேர்தல் முடிவு, நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் புதிய தலைவர் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.