டில்லி:

‘‘பீகார் மாநிலம் முழுவதுக்கும் பாஜக தீ வைத்துவிட்டது. முதல்வர் நிதிஷ்குமார் மாநிலத்துக்கு முடிவு கட்டிவிட்டார்’’ என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் நலந்தா மாவட்டத்தில் ராமநவமி ஊர்வலத்தில் இரு சமூக மக்களிடையே மோதம் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் 20 பேர் காயமடைந்தனர். முதல்வர் நிதிஷ்குமாரின் சொந்த மாவட்டத்தில் நடந்த இந்த கலவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கலவரம் பகல்பூர், அவுரங்காபாத் ஆகிய மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது. இது தொடர்பாக 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 35 கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க 2 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நிதிஷ்குமார் தற்போது அனைத்து முடித்துவிட்டார். ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் பாஜக தீ வைத்துவிட்டது. அதனால் தான் பீகார் முழுவதும் பரவலாக வன்முறை சம்வங்கள், கலவரம் நடந்துள்ளது’’ என்றார்.