பாட்னா: பீகாரில் 2ம் கட்ட சட்டசபை தேர்தலில் 53.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

பீகாரில் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.  அறிவித்தப்படி முதல் கட்ட தேர்தல், கடந்த 28ம் தேதி முடிந்தது. 2-ம் கட்ட தேர்தல், இன்று நடைபெற்றது.

மொத்தம் 17 மாவட்டங்களில்  உள்ள 94 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசினி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. 2ம் கட்ட தேர்தலில் 53.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.