டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சர்ச்சைக்கு மத்தியில் இன்று மாலை தேர்தல் தேதியை அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். இன்று மாலை 4 மணி அளவில் தேர்தல் தேதி வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் தற்போது பாஜக நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி  நடைபெற்று வருகிறது. இந்த  மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்குள் அங்கு தேர்தலை நடத்த வேண்டியது அவசியம்.

இதற்கான முன்னேற்பாடுக்ளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பீகாரில் பல லட்சம் போலி வாக்காளர்கள், வெளிநாட்டுகளில் இருந்து தஞ்சம் புகுந்த அகதிகள் என பலரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருந்ததால், அவர்களை நீக்கும் வகையில், தீவிர தேர்தல் சீர்திருத்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை வெளியிடப்படுகிறது. இன்று மாலை 4மணி அளவில் இந்திய தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது.

243 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட பிகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

சமீபத்தில், தலைமை தேர்தல் ஆணையர் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்ட நிலையில் இன்று மாலை 4 மணிக்கு பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது