அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் “பிகில்”. விஜய் பிறந்தநாளை ஒட்டி ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி இருந்தன.

முதல் போஸ்டர் அப்பா விஜய் ராயபுரம் மீன்மார்க்கெட்டில் தாதா தோற்றத்தில் உட்கார்ந்துள்ளார். மகன் விஜய் கையில் பந்துடன் ஸ்போர்ட்ஸ் டிரெஸ்லில் உள்ளார்.

அடுத்த போஸ்டரில் 4 விஜய் இருக்கிறார்கள் இடப்புறம் இளமையான விஜய் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ஸில் இருக்கிறார் வலப்புறம் கோச் பேக்குடன் இருக்கிறார். ஸ்போர்ட்ஸ்மேனாக இருந்து கோச்சாக மாறுகிறார் மகன் விஜய்.

கீழே தாதாவாக வேஷ்டி சட்டையில் கையில் கத்தியுடன் நெஞ்சில் சிலுவையுடன் வயதான தோற்றத்தில் இருக்கிறார் விஜய். மேலே மூன்றாவது போஸ்டரில் கையில் செயினுடன் கைலி, ஸ்போர்ட்ஸ் பனியனுடன் ரௌடிகளை விரட்டும் விஜய் இருக்கிறார். அது அப்பா விஜய் தான். இரண்டாவது போஸ்டரில் அது தெளிவாக இருக்கிறது.

மைக்கேல் என்பது தந்தை விஜய்யின் பெயராக இருக்கக்கூடும் என அனுமானிக்கப்படுகிறது. மகன் விஜய்யின் பெயர் தான் பிகில் போல .