
பாட்னா: தற்போதைய பீகார் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையில் முன்னணியில் இருக்கிறது. ஆனால், அந்தக் கூட்டணியில் பா.ஜ. கையே ஓங்கியுள்ளது.
பீகார் சட்டசபையின் மொத்தமுள்ள 243 தொகுதிகளில், இரு கட்சிகளும் கிட்டத்தட்ட சரிசமமாக தொகுதிகளைப் பிரித்துக்கொண்டு போட்டியிட்டன. நிதிஷ்குமார்தான் முதல்வர் என்று வெளிப்படையாக அறியப்பட்டாலும், கூட்டணியில் யார் அதிக தொகுதிகளை வெல்கிறார்களோ, அவர்களுக்குத்தான் முதல்வர் பதவி என்ற ஒரு விஷயமும் கூட்டணிக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
இந்நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பாரதீய ஜனதா 74 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 45 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. இரு கட்சிகளுக்குமான எண்ணிக்கையில் பெரியளவு வித்தியாசம் நிலவுகிறது.
எனவே, முதல்வர் பதவியை பாரதீய ஜனதா கோரினால், நிதிஷ்குமார் ஆட்சியில் பங்கேற்க முடியாது. தன் கட்சியைச் சேர்ந்த ஒருவரைத்தான் துணை முதல்வராக ஆக்க முடியும். அதேசமயம், முதல்வர் பதவியை நிதிஷ்குமாருககே பா.ஜ. விட்டுக்கொடுத்தால், அமைச்சரவையில் பெரியளவில் பா.ஜ. ஆதிக்கமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]